போதை வஸ்துக்காரர்களால் பாதிக்கப்படும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்....
இரத்மலான ஜேர்மன்டெக் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் போதை வஸ்துக்காரர்களால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுபெத்த, தெலவல மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தங்கியிருக்கும் குறித்த தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களிடம் இந்தப் பிரதேசத்திலுள்ள போதை வஸ்துக்காரர்கள் பல்வேறு வகையிலும் கப்பம் கோருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பாக கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் பலமுறை குறித்த மாணவர்களால் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்று மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கப்பம் கோரும் நபர் ஒருவரைப் பிடித்த மாணவர் குழு அவரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும், இதனால் கோபமடைந்த ஒரு குழுவினர் மாணவர்களைத் தாக்கியுள்ளதாகவும், இதன்போது காயமடைந்த மாணவர் ஒருவர் களுபோவிலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதை வஸ்துக்காரர்களால் பாதிக்கப்படும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்....
Reviewed by Author
on
June 03, 2016
Rating:

No comments:
Post a Comment