அரசியலில் பெண்களுக்கு ஒரு மைல்கல்: ஹிலாரி கிளிண்டன்.....
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார்.
நியூஜெர்சி மாகாணத்தில் நடந்த வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து ஹிலாரி கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் நியூயார்க்கில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய ஹிலாரி, வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பை தனக்கு உருவாக்கித் தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் இதுவரை எந்த பெரிய அரசியல் கட்சியின் சார்பாகவும் பெண்கள் வேட்பாளராகப் போட்டியிட்டதில்லை என்றும், பெண்களுக்கு இது ஒரு மைல் கல்லாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் மற்றும் பெர்னியை வாழ்த்தியுள்ள ஒபாமா, இருவரின் பிரசாரங்கள் ஜனநாயக கட்சிக்கு மேலும் வலுசேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் கட்சியின் மாநாட்டில் ஹிலாரி அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசியலில் பெண்களுக்கு ஒரு மைல்கல்: ஹிலாரி கிளிண்டன்.....
Reviewed by Author
on
June 08, 2016
Rating:

No comments:
Post a Comment