மோடிக்கு கார் ஓட்டிய மெக்சிகோ அதிபர்....
மெக்சிகோ சென்றுள்ள இந்திய பிரதமர் மோடியை தனது காரில் அழைத்துச் சென்ற அந்நாட்டு அதிபர் என்ரிக் பினா நீட்டோ அந்த காரை அவரே ஓட்டியுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா, கத்தார், ஆப்கானிஸ்தான், சுவிட்சர்லாந்து மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மெக்சிகோ சென்றடைந்தார். அங்கு மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நியடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த நிலையில் மெக்சிகோ வந்த மோடிக்கு, அந்நாட்டு அதிபர் என்ரிக்பினா நீட்டோ இரவு விருந்தளித்துள்ளார்.
இதற்காக நீட்டோ தானே தனது காரில் மோடியை உணவகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த காரை அவரே ஓட்டி உள்ளார்.
.
மோடிக்கு கார் ஓட்டிய மெக்சிகோ அதிபர்....
Reviewed by Author
on
June 09, 2016
Rating:

No comments:
Post a Comment