உலகின் அமைதியான மற்றும் ஆபத்தான நாடுகள் இதுதான்: முதலிடம் எதற்கு?
உலக பொருளாதார மற்றும் அமைதி நிறுவனம் ஆண்டுதோறும் அமைதியான நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இதில் 2015ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில், ஐஸ்லாந்து முதலிடம் பிடித்தது.
டென்மார்க், ஆஸ்திரியா, நியூசிலாந்து, போர்த்துக்கல், செக் குடியரசு, சுவிட்சர்லாந்து, கனடா, ஜப்பான், ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 10 இடங்களில் உள்ளன.
இப்பட்டியலில்‛டாப் 100'ல் கூட இந்தியா இடம் பெறவில்லை. இந்தியாவுக்கு 141வது இடமே கிடைத்துள்ளது. இதில் பிரித்தானியா 47வது இடத்தில் உள்ளது.
மேலும், பாகிஸ்தானுக்கு 153வது இடமும், ஆப்கானிஸ்தானுக்கு 160வது இடமும், கடைசி இடமான 163வதுஇடத்தை சிரியாவும் பெற்றன.
அதேபோல் ஆபத்தான நாடுகள் பட்டியலில் சிரியா, தெற்கு சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஏமன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, உக்ரைன், சூடான், லிபியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.
உலகின் அமைதியான மற்றும் ஆபத்தான நாடுகள் இதுதான்: முதலிடம் எதற்கு?
Reviewed by Author
on
June 09, 2016
Rating:

No comments:
Post a Comment