இலங்கையில் உத்தியோகபூர்வ மொழி ஆய்வு கூடம்
இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ மொழிக்கொள்கையை உரியமுறையில் நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் உதவியளிக்கும்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித்திட்டம்(யுஎன்டிபி) இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளது
ஐக்கிய நாடுகளின் நிதியுதவியில் அகலவத்த பகுதியில் புதிய மொழி ஆய்வு கூடம் ஒன்று அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் யுஎன்டிபியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இவ்வாறான ஆய்வு கூடம் ஒன்று ராஜகிரியவில் அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஒவ்வொரு ஆய்வு கூடத்துக்கும் 10 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் உத்தியோகபூர்வ மொழி ஆய்வு கூடம்
Reviewed by NEWMANNAR
on
June 17, 2016
Rating:

No comments:
Post a Comment