அண்மைய செய்திகள்

recent
-

பகிடி வதைக்கு மன்னிப்பு கிடையாது!


பகிடி வதையுடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு கிடையாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

மாரவில நாத்தான்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

பகிடி வதையில் ஈடுபட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும், பகிடி வதையுடன் தொடர்புடைய எவருக்கும் எவ்வித மன்னிப்பும் அளிக்கப் போவதில்லை.

பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றார்கள்.தங்களது கல்வி உரிமையை பெற்றுக்கொள்வதற்காக இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை.

பகிடிவதை மேற்கொண்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது.

சட்டத்தில் தடை செய்யப்பட்ட பகிடி வதையை தடுக்க எவரேனும் உதவினால் அவர்களுக்கும் தண்டனை விதிக்க நேரிடும்.

பேரணிகளை நடத்தி போராட்டங்களை நடத்தி பரீட்சையில் சித்தியடைய முடியாது.

மக்களின் வரிப் பணத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவியர் இவ்வாறு பொன்னான நேரத்தை வீரயமாக்குவது பாரிய குற்றமாகும்.

மாணவர்கள் என்ன செய்தாலும் எவ்வாறான போராட்டம் நடத்தினாலும் பகிடிவதையுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

பகிடி வதைக்கு மன்னிப்பு கிடையாது! Reviewed by NEWMANNAR on June 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.