டிஸ்கவரி புகழ் பியர் கிரில்ஸ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!
அடர்ந்த அமேசான் காடுகளாக இருந்தாலும் சரி, வெயில் வாட்டி எடுக்கும் சஹாரா பாலைவனமாக இருந்தாலும் சரி, நான்கு பக்கமும் தண்ணீர் மட்டுமே சூழ்ந்துள்ள தனி தீவாக இருந்தாலும் சரி, மக்கா... வாழ்வே முடியாது எனும் இடத்திலும் அங்கிருக்கும் புல், பூண்டை வைத்து வாழ்ந்து காட்டும் அசாத்திய மனிதன் தான் பியர் கிரில்ஸ்.
டிஸ்கவரி சேனல் தமிழில் அறிமுகமான நாள்முதல் பெரும்பாலான தமிழர்களுக்கு இவர் மிகவும் பரிச்சயமான நபராக திகழ்ந்து வருகிறார்.
இவரை கண்டால் சிங்கம், புலி, பாம்பு, எலி அனைத்தும் நடுங்கம்.
எப்போது எதை பிடித்து, வறுத்து சாப்பிடுவார் என்றே கூற முடியாது. எப்படியும் வாழலாம், இப்படியும் வாழலாம் என வாழ்ந்துக் காட்டிக் கொண்டிருப்பவர் தான் பியர் கிரில்ஸ்.
பியர் கிரில்ஸின் உண்மையான பெயர் எட்வார்ட் மைக்கல் கிரில்ஸ் ஆகும். இவரது சகோதரி இவருக்கு வைத்த புனைப்பெயர் தான் பியர் (Bear). இவர் வளர, வளர இவரது சகோதரி வைத்த பெயரே அனைவரும் அழைக்கும் பெயராக மாறிப்போனது.
- பியர் கிரில்ஸ் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் (Second Dan Black Belt In Shotokan Karate) வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பியர் கிரில்ஸ் SAS (Special Air Service)-ல் இருப்புவீரர்கள் (Reservist) படையில் மூன்று வருடங்கள் சேவை புரிந்துள்ளார்.
- SAS-ல் சேவை புரிந்துக் கொண்டிருந்த காலத்தில் 1996-ம் ஆண்டு ஒரு முறை பாராசூட்டில் இருந்து ஸ்கைடைவ் செய்த போது 16,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார் பியர் கிரில்ஸ். இதனால் இவரது முதுகெலும்பு மூன்று துண்டுகளாக உடைந்தன.
- இந்த விபத்து நடந்த 18 மாதங்களில் பியர் கரில்ஸ் எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறி சாதனை புரிந்தார். இந்த சாதனையை செய்த போது பியர் கிரில்ஸ்-க்கு வயது 23. இது 1998-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக இடம்பெற்றது.
- மலை ஏறும் போது கால்களை இழந்த தனது நண்பருக்கு ஃபண்ட்ஸ் சேகரிப்பதற்காக தேம்ஸ் ஆற்றை நிர்வாணமாக சாதாரண பாத்-டப்பில் துடுப்பு செய்து கடந்தார் பியர் கிரில்ஸ்.
- மிக உயரத்தில் ஏர்-பலூன்-ல் அமர்ந்து டின்னர் பார்ட்டி செய்த சாதனையும் பியர் கிரில்ஸ் வசம் தான் உள்ளது. இவர், 7,600 அடியில் இந்த சாதனையை செய்தார்.
- இவர் தனது சுய சிறுநீர் மற்றும் இறந்த மிருகங்களின் இதயங்களை உண்ணும் பழக்கம் கொண்டுள்ளவர்.
- ஒருமுறை அட்லாண்ட்டிக் முதல் ஆர்டிக் கடல் வரை ஓர் திறந்த வகை படகில் பயணித்துள்ளார் பியர் கிரில்ஸ்.
- பியர் கிரில்ஸ் இதுவரை 11 புத்தகங்கள் எழுதியுள்ளார். இது மிஷன் சர்வைவல் (Mission Survival) எனும் புத்தகம் மிகவும் பிரபலமானது ஆகும்.
டிஸ்கவரி புகழ் பியர் கிரில்ஸ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!
Reviewed by Author
on
June 15, 2016
Rating:

No comments:
Post a Comment