வவுனியாவில் 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் வயல்வெளிக்கு அண்மையில் உள்ள கால்வாயிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை பிரதேசவாசிகளால் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா – திருநாவற்குளத்தினைச் சேர்ந்த 49 வயதான 4 பிள்ளைகளின் தந்தை ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி தொழிலுக்குச் சென்ற குறித்த நபர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் அவரைத் தேட ஆரம்பித்துள்ளனர்.
தொடர்ந்தும் அவர் கிடைக்காத நிலையில், நேற்றைய தினம் உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே வவுனியா பூந்தோட்டம் கால்வாய்க்கு அருகிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
Reviewed by NEWMANNAR
on
June 26, 2016
Rating:

No comments:
Post a Comment