த.தே.கூட்டமைப்பு எம்.பி.யின் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் யாழில் உள்ள வீட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சனிக்கிழமை சென்றுள்ளார்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் புதல்விக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காகவே ஜனாதிபதி நேரில் சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.
முன்னதாக யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் அதே நாள் தனது புதல்வியின் பிறந்த நாள் என்பதால் நேரில் வீட்டிற்கு வருகை தருமாறு குறித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்ததாகவும் இந்நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு நேரில் சென்று வாழ்த்தியதோடு சிறு விருந்துபசாரத்திலும் பங்கேற்றதாகவும் தெரியவருகின்றது.
இக்கொண்டாட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, ஐ.ம.சு. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், மஸ்தான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
த.தே.கூட்டமைப்பு எம்.பி.யின் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி!
Reviewed by Author
on
June 19, 2016
Rating:

No comments:
Post a Comment