கொலைகாரன் யார்? சிக்கியது முக்கிய ஆதாரங்கள்: புதிய தகவல்கள்
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கு ரெயில்வே பொலிசிடம் இருந்து சென்னை பொலிசுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
கடந்த 24ம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி மர்ம நபர் ஒருவரால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஆனால் இந்த கொலையை செய்தவன் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. இந்த வழக்கு விசாரணை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த வழக்கில் திருப்திகரமான முன்னேற்றம் தெரியவில்லை என்ற அதிருப்தி எழுந்ததையடுத்து வழக்கு ரெயில்வே பொலிசிடம் இருந்து சென்னை பொலிசுக்கு (நுங்கம்பாக்கம்) மாற்றப்பட்டுள்ளது.
மேலும், நுங்கம்பாக்கம் பொலிசுக்கு சுவாதி கொலை வழக்கு மாற்றப்பட்டு உள்ளதால், கொலைகாரனை கைது செய்ய 3 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு கமெராவில் பதிவாகி உள்ள கொலைகாரன் என்று சந்தேகப்படும் மர்ம வாலிபரின் படம் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுவரை நடந்த விசாரணையில் அந்த மர்ம வாலிபர் தான், கொலைகாரனாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு பொலிசார் வந்துள்ளனர். கொலைகாரன் யார்? என்பது பற்றியும் சில உறுதியான தகவல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
கொலைகாரன் தப்பிவிடக்கூடும் என்பதால், அந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாக சென்னை நகர உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொலைகாரன் யார்? சிக்கியது முக்கிய ஆதாரங்கள்: புதிய தகவல்கள்
Reviewed by Author
on
June 28, 2016
Rating:

No comments:
Post a Comment