ஒரு ஆசிரியரின் அன்பை அரவணைப்பை இன்றைய நவீன கற்பித்தல் சாதனங்களால் வழங்கமுடியுமா? - ஆசிரியர் மாநாட்டில் தமிழ் நேசன் அடிகளார்
இன்று அதிநவீன கற்பித்தல் சாதனங்கள் வந்துவிட்டன. இணையத்தளத்தை ‘தகவல் சுரங்கம்’ என்று சொல்வார்கள். ஒரு ஆசிரியரின் உதவி இல்லாமல் எதையும் படிக்கலாம் எவ்வளவும் படிக்கலாம் பட்டம் பெறலாம் என்ற நிலமை வந்துவிட்டது. ஆனால் ஒரு ஆசிரியரின் அன்பை அரவணைப்பைää பரிவை பாசத்தை இந்த நவீன கற்பித்தல் சாதனங்களால் வழங்க முடியுமா? என அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் கேள்வி எழுப்பினார்.
மன்னார் கல்வி வலயத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆசிரியர் மாநாட்டின் முதல்நாள் நிகழ்வு கடந்த செவ்வாய்க் கிழமை (14.06.2016) மன்னார் புனித சவோரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் தமிழ் நேசன் அடிகளார் சிறப்புரையாற்றினார்.
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனரும்ää மன்னார் கலையருவி அமைப்பின் இயக்குனரும் ‘மன்னா’ என்ற கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும்ää விஞ்ஞானியுமான அப்துல் கலாமிடம் “உங்கள் மறைவுக்குப் பின்னர் மக்கள் உங்களை யாராக நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்? குடியரசுத் தலைவர் என்றா? விஞ்ஞானி என்றா? எழுத்தாளர் என்றா? ஏவுகணை நாயகன் என்றா? இந்தியா 2020 என்றா? எனக் கேட்டபோது அப்துல் கலாம் சொன்னார்ää “நான் ஒரு ‘ஆசிரியர்’ என்று நினைவுகூரப்படவே விரும்புகிறேன்” என்று. ஆசிரியப்பணி அற்புதமான ஒரு பணி. இரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைää எதிர்காலச் சந்ததியை உருவாக்குகின்ற பணி.
நமது வணக்கத்திற்குரிய நால்வராகிய மாதாää பிதாää குருää தெய்வம் என்பவர்களில் மாதா பிதாவுக்கு அடுத்த இடத்தில் குரு அதாவது ஆசிரியர் வைத்துப் போற்றப்படுகின்றார். ஆசிரியப் பணி என்பது ஒரு உழைப்பு அல்லää அது ஒரு அழைப்பு. அற்புதமான ஒரு அழைப்பு. ஒரு ஆசிரியர் எப்போதும் ஆசிரியராகவே இருப்பார். ஆனால் அந்த ஆசிரியரிடத்தில் கல்விகற்றவர் உயர் பதவியைää உயர் நிலையை அடைந்துவிடுவார்.
ஒரு நாட்டினுடைய தலையெழுத்து வகுப்பறைகளில் வடிவமைக்கப்படுகின்றது. இதன் முக்கிய பங்குதாரர் ஆசிரியர்களே. நமது நாளைய சமூகங்களின் தலைவிதி இன்றைய வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகின்றது. இன்று ஆசிரியர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களுக்கு எப்படிப்பட்ட மானிடää சமயää ஒழுக்க விழுமியங்களைக் கற்றுக்கொடுக்கின்றார்களோ அதைப்பொறுத்துத்தான் நாளைய சமூகம் எப்படி இருக்கப்போகின்றது என்பது தீர்மானிக்கப்படுகினற்து.
கல்வி என்பது வெறும் எண்ணும் எழுத்தும் மட்டுமல்லää அது வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் மட்டும் நடைபெறுவதில்;லை. கல்வி என்பது வாழ்க்கை. அது முழு உலகத்திலும் நடைபெறுவது. நமது மாணவர்கள் எழுத்தை மட்டும் படிக்கின்றவர்களாக அல்லாது கல்வியைää வாழ்க்கையைக் கற்கின்றார்களாக இருக்க வேண்டும். மனப்பாடம் செய்யும் எந்திரங்களை நமது கல்விக்கூடங்கள் உருவாக்கக்கூடாது.
மாணவருக்கு கல்வியைப் புகட்டும்போது ஒரு ஆசிரியர் எப்போதும் ஒரு தாய்க்குப் பிரசவம் பார்ப்பதுபோன்று செயற்பட வேண்டும். ஏனெனில் பிரசவம் பார்ப்பவருடைய வேலை தானே பிள்ளையைப் பெறுவதல்ல. மாறாகப் பிள்ளை பிறக்க உதவி செய்வதே இவருடைய வேலை! மாணவர்களுக்குள் மறைந்தும் மறையாமலும் கிடக்கின்ற பெறுமதிமிக்க – சக்தி வாய்ந்த திறமைகளை அவர்கள் வெளிக்கொணர ஆசிரியர்கள் உதவவேண்டும்.
கல்வி என்பது வெற்றுக்குடத்திற்கு நீர் நிரப்புவது அல்ல விளக்கிற்கு ஒளியூட்டுவதே உண்மைக் கல்வி.
ஒரு ஆசிரியரின் அன்பை அரவணைப்பை இன்றைய நவீன கற்பித்தல் சாதனங்களால் வழங்கமுடியுமா? - ஆசிரியர் மாநாட்டில் தமிழ் நேசன் அடிகளார்
Reviewed by Author
on
June 19, 2016
Rating:
No comments:
Post a Comment