அண்மைய செய்திகள்

recent
-

கடற்படை வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு பள்ளிமுனை மக்கள் கோரிக்கை

கடற்படையினரிடம் உள்ள தமது காணிகளை மீட்டுத் தருமாறு மன்னார் – பள்ளிமுனை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிமுனை கிராமத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளில் கடற்படையினர் முகாம்களை அமைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து வேறு இடங்களில் குடியிருந்த மக்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தமது பூர்வீக கிராமங்களில் குடியிருக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

சொந்த வீடுகள் மற்றும் காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.

இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என நல்லாட்சி அரசாங்கம் தெரிவிக்கும் நிலையில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் காணிகள் இன்றும் விடுவிக்கப்படாமல் உள்ளது.

தமது காணிகளை மீட்டுத்தருமாறு வலியறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த போதிலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோர் தொடர்ச்சியாக மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என நல்லாட்சி அரசாங்கத்திட்டம் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற நிலையில் ஒரு சில பிரதேசத்தில் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இருந்தும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் காணிகள் இராணுவம், கடற்படையினரிடம் கைவசம் இன்றும் உள்ளன.

யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமது சொந்த காணிகளில் இராணுவம் எதற்காக குடியிருக்க வேண்டும் என தமிழ் மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்
கடற்படை வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு பள்ளிமுனை மக்கள் கோரிக்கை Reviewed by NEWMANNAR on June 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.