சத்தியலிங்கத்தை அச்சுறுத்தியவர் கைது
வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கு தொலைபேசி மூலமாக மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரியதாக சந்தேக நபரொருவரை வவுனியா பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
கடந்த மாதம் 20-ம் திகதி வட மாகாண சுகாதார அமைச்சரின் தொலைபேசிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததுடன் 12 லட்சம் ரூபாய் கப்பம் கோரியதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டி ருந்தது.
இதன் நிமிர்த்தம் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு குழுக்களை நியமித்திருந்தார்.
இக் குழுக்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்ணான்டோவின் மேற்பார்வையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இதன்போது வவுனியா குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.பி.சி.எஸ்.கே செனரத் தலை மையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை மேற்கொண்டு கிளி நொச்சி இரத்தினபுரத்தை பிறப்பிட மாகவும் தற்போது வவுனியா புதுக்குளத்தில் வசித்து வரும் 38 வயதுடைய நபரொருவரை நேற்று சந் தேகத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை வவு னியா நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்ப்படுத்திய நிலையில் எதிர்வரும் 17-ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இச் சந்தேகநபர் தன்னை இராணுவ புலனாய்வாளர் எனவும் தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று வந்திருப்பதாகவும் தெரிவித்து பலரிடம் கப்பம் பெறும் முயற்சி களிலும் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
இந்த அச்சுறுத்தல் சம்பவம் காரணமாக கடந்த சில நாட்களாக வடமாகாண சுகாதார அமைச்சர் பொது நிகழ்வுகளை புறக்கணித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
June 04, 2016
Rating:

No comments:
Post a Comment