யாழ் போதனா வைத்தியசாலையில் சிசு பலியான சம்பவம் -ஒட்சிசன் சிலிண்டர் காரணமா?
யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை சிசு ஒன்று பலியான சம்பவம் குறித்து பலதரப்பட்ட குற்றச்சாட்டு நிலவி வருகின்ற போதிலும், இது சம்பந்தமான விசாரணை முடிவடைந்த பின்னரே இதற்கான உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
தாதிய உத்தியோகத்தரே இதற்கு பிரதான காரணம் என வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்ற போதிலும், சிசுவின் இறப்பிற்கு தாங்கள் காரணமில்லையென பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஒரு விடுதியில் நோயாளிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு வைத்தியரின் சிகிச்சை முகாமைத்துவம் காரணமாக இருக்கின்றபோதிலும்
தாதியின் பொறுப்பான நடவடிக்கை இல்லாவிட்டால் பயனில்லை. நோயாளியின் சிகிச்சையில் தாதியின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாகும்.
யாழ் வைத்தியசாலையில் சிசு இறப்பிற்கு ஒட்சிசன் சிலிண்டர் காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
தாதிய உத்தியோகத்தர்களின் கருத்துப்படி ;
இரண்டு தாய்மார்கள் வேறு வேறு நேரங்களில் சத்திர சிகிச்சைக்கென அனுபதிக்கப்பட்டதாகவும், முதலாவது சத்திரசிகிச்சை முடிவடைந்து சிசுவிற்கு தேவையான அளவு ஒட்சிசன் இருந்ததாகவும் பின்பு ஒட்சிசன் சிலிண்டரோடு விசேட குழந்தை பராமரிப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இரண்டாவது தாயின் சத்திரசிகிச்சையின்போது, ஒட்சிசன் பற்றாக்குறை காரணமாக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும். சத்திரசிகிச்சை செய்து சிசுவை வெளியில் எடுக்கும்போது ஒட்சிசனிற்குரிய ஆயத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், முதலாவது சத்திர சிகிச்சை செய்யப்பட்டு எந்தவித ஒட்சிசன் பிரச்சினைகள் ஏற்படாது சிலிண்டரோடு விசேட குழந்தை பராமரிப்பு பிரிவிற்கு இடம் மாற்றப்பட்ட சிசுவே இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அக்கழந்தை முதிராக் குழந்தை என ஏற்கனவே அடையாளங்காணப்பட்டே சிகிச்சை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது குழந்தைக்கு ஏற்பட்ட ஒட்சிசன் பிரச்சினைக்கும், முதலாவது குழந்தை இறந்ததற்கும் முடிச்சு போடப்படுகின்றது என தாதியர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் மீது வைத்திய உத்தியோகத்தர்களுக்கு சில கருத்து முரண்பாடுகளும் ஏற்கனவே இருந்ததாக அறியக்கூடியதாக உள்ளது.
அதிகார வர்க்கங்கள் தனது குற்றத்தை மறைக்க திசை திருப்பும் திறன் கொண்டவர்கள் எனவும் பேச்சுக்கள் கசிவதாகவும் அறியப்படுகின்றது.
எது எவ்வாறாயினும் விசாரணை முடிவடைந்த பின்னரே உண்மை வெளிச்சத்திற்கு வரும்

Reviewed by NEWMANNAR
on
June 20, 2016
Rating:

No comments:
Post a Comment