அண்மைய செய்திகள்

recent
-

படுக்கையறையில் நுழைந்த ராட்சத மலைப்பாம்பு: அலறியடித்து ஓடிய இளம்பெண்.....


அவுஸ்திரேலியா நாட்டில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்த வீட்டில் உள்ள படுக்கையறையில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குயின்ஸ்லேண்ட் நகரில் ட்ரினா ஹிப்பர்ட் என்ற பெண்மணி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டின் கூரைக்கு மேல் குட்டி மலைப்பாம்பு ஒன்று கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ட்ரினா வீட்டில் படுக்கை அறையில் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் திடீரென வினோதமான ஓசை கேட்டு எழுந்துள்ளார்.


அப்போது, சுமார் 5.2 மீற்றர் நீளமும் 40 கிலோ எடையும் கொண்ட அந்த ராட்சத மலைப்பாம்பு படுக்கையை உரசிக்கொண்டு ஊர்ந்து சென்றுள்ளது.

மலைப்பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பாம்புகளை பிடிப்பவருக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த அவர் மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து பெரிய மரப்பெட்டியில் அடைத்தார்.

இந்த சம்பவம் குறித்து ட்ரினா பேசியபோது, ‘நீண்டகாலமாக எங்கள் வீட்டு கூரையில் பாம்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், நான் இதுவரை பார்க்கவில்லை.

எனினும், இன்று உணவு கிடைக்காத காரணத்தினால், அதனை தேடிக்கொண்டு அந்த மலைப்பாம்பு வீட்டிற்கு நுழைந்துருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட அந்த மலைப்பாம்பு தற்போது விலங்குகள் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ளது.

படுக்கையறையில் நுழைந்த ராட்சத மலைப்பாம்பு: அலறியடித்து ஓடிய இளம்பெண்..... Reviewed by Author on June 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.