காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றில் சமர்பிப்பு....
காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்ட மூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளது.
இதன்படி காணாமல் போனோரை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அவர்களின் உறவினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவை இந்த சட்ட மூலத்தில் பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழ்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளும் இந்த அலுவலகம் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
காணாமல் போன நபர் உயிரோடு இருந்தால் அதனை அவரது உறவினர்களுக்கு அறிவிப்பதற்கு இந்த அலுவலகம் நடவடிக்கை எடுக்கும்.
காணாமல் போனோர் தொடர்பான புதைகுழிகள் குறித்து உறுதியான ஆதாரங்கள் இருந்தால் அதனைத் தோண்டும்படி உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றங்களிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் அதிகாரமும் சட்ட மூலத்தின் அடிப்படையில் இந்த அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தின் தலைமையகம் கொழும்பில் அமைக்கப்பட உள்ளது.
பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்கும் இந்த சட்ட மூலத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆளும் கட்சியின் அமைப்பாளரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல,
இந்த சட்ட மூலத்தை மேலும் ஆராய்வதற்கு சட்ட மூலங்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்பின்னர் விரைவில் நாடாளுமன்றத்தில் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளபடுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றில் சமர்பிப்பு....
Reviewed by Author
on
June 23, 2016
Rating:

No comments:
Post a Comment