மன்னாரில் மாபெரும் இரத்ததான நிகழ்வு…16.06.2016 அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் கீழ் இயங்கிவரும் “உதவிக்கரம்”
(Centre For Disabled) நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வருடாந்த இரத்ததான நிகழ்வு 16.06.2016 வியாழக்கிழமை அன்று
CFD நிலையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
காலை 9.00 மணிக்கு கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் மன்னார் மாவட்டம் மட்டுமன்றி ஏனைய மாவட்டங்களிலிருந்தும் பின்வரும் அமைப்புக்களிலிருந்து மொத்தமாக 57 நன்கொடையாளர்கள் இரத்ததானம் செய்ய முன்வந்திருந்தனர்.
- கறிற்றாஸ் வாழ்வுதயம்
- உதவிக்கரம்-(Centre For Disabled)
- அருட்பணி. அருள்ராஜ் அடிகளார் (பங்குத்தந்தை நானாட்டான்)
- அருட் சகோதரிகள்
- S.J.L.Convent நொச்சிக்குளம் உயிலங்குளம்
- கிறின் பீல்ட் விளையாட்டுக் கழகம்
- Janasakthi Insurance
-
AIA Insurance- Vavuniya
Cooperative Insurance
- gpuNjr nrayfk; - kd;dhh;
- PLC-Mannar
- RDA Mannar
- Hero Honda Company – Mannar
- Water supply – Mannar
- Department of Fisheries - Mannar
- புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மன்னார்
- ஏனைய பொது நலன் விரும்பிகள்.
இந் நிகழ்வானது
Lions Club of Kandana-Jaela மற்றும் வவுனியா
AIA Insurance ஆகியவற்றின் அனுசரணையுடன் நடைபெற்றதுடன் இவ் இரத்ததான நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளாரின் சார்பிலும் வாழ்வுதய நிர்வாக அலுவலர் திரு.அ.ம.அல்மேடா அவர்களின் சார்பிலும் “உதவிக்கரம்”
(Centre For Disabled)நிலையத்தின் திட்ட முகாமையாளர் திரு.எமில்ராஜா அவர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்.
மன்னாரில் மாபெரும் இரத்ததான நிகழ்வு…16.06.2016 அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
Reviewed by Author
on
June 23, 2016
Rating:
No comments:
Post a Comment