அண்மைய செய்திகள்

recent
-

தடைகளை தகர்த்தெறிந்த சாதனை பெண்!


விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்று இலட்சியம் கொண்டு அத்துறையில் கால்பதித்தவர் தான் பாகிஸ்தான் விளையாட்டு வீராங்கனை Diana Baig.

கால்பந்து மற்றும் கிரிக்கெட் என இருமுக திறமையோடு கலக்கி வருகிறார் Diana Baig(20).

பாகிஸ்தானில் Hunza என்ற பகுதியில் பிறந்த இவர், சிறுவயதிலேயே விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

அந்த ஆர்வத்தின் தூண்டுதலே, இன்று இருமுகம் கொண்ட நாயகியாக இவர் வலம்வரக் காரணமாக அமைந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய இவர், Gilgit-Baltistan women's cricket அணிக்கு தலைமை வகித்து வந்துள்ளார், அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் A அணியில் இடம்பெற்றுள்ளார்.



அதன்பின்னர், 2013 ஆம் ஆண்டு மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.

இவர் முதல் முறையாக, கடந்த 2015 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற தேசிய கிரிக்கெட் போட்டியில் தனது நாட்டிற்கு விளையாடி திறமையை வெளிப்படுத்தினார்.

தனது அசாத்திய ஆட்டத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கலக்கி வந்த இவர், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 2014 SAFF Women’s Championships கால்பந்து போட்டியில் தடம்பதித்தார்.

இவரின், திறமையின் காரணமாகவே பாகிஸ்தான் நாட்டின் கால்பந்து அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

இதுகுறித்து Diana Baig கூறியதாவது, சிறுவயதில் என்னுடைய தெருக்களில் வைத்து சக சிறுவர்களோடு கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவேன். நான் வசித்த இடம் சற்று மலைப்பகுதி என்பதால் விளையாடுவது மிகுந்த சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.

கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு என்பதால் உள்ளூர் போட்டிகளில் நடக்கும் பங்கேற்று, 2010 ஆண்டு ஒரு அணியின் தலைவியாக உருவெடுத்தேன்.

அதன் பின்னர் எனது கிரிக்கெட் பயணம் தொடர்ந்தது, 2016 ICC Women's World Twenty20 போட்டியில் பங்கேற்றது என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது, அது எனக்கு ஒரு புதுவாழ்க்கையையும், புதுவித உந்துசக்தியையும் அளித்தது.

தற்போது கால்பந்து போட்டியிலும் எனது திறமையை காட்ட தயாராக உள்ளேன், காலையில் கால்பந்து விளையாடுவேன், அதன்பின்னர் 11 மணி அல்லது 12 மணியளவில் கிரிக்கெட் விளையாட்டிற்காக பயிற்சிகளை மேற்கொள்வேன்.

இந்த பயிற்சியை மாலை 4.00 மணிவரை தொடருவேன் என கூறியுள்ளார்.

தடைகளை தகர்த்தெறிந்த சாதனை பெண்! Reviewed by Author on June 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.