காலநிலை மாற்றத்தினால் அழிந்து போன முதல் எலி இனம்....
அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு இனமான Bramble Cay melomys அழிவடைந்த இனமாக அறிவிக்கப்படவுள்ளது.
Queensland பல்கலைக்கழக ஆய்வாளர்களும், Queensland அரசும் கடந்த 2014 இல் மேற்கொண்ட ஆய்விலிருந்து குறித்தவகை எலியினம் அவற்றுக்குரிய வாழிடத்திலிருந்து இல்லாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
உரோமம் கொண்ட குறித்த எலியினம் Torres Strait பகுதியில் 340 மீட்டர் நீளம், 150 மீட்டர் அகலமான மிகச்சிறிய பரப்பிலேயே வாழ்ந்து வந்துள்ளது.
900 சிறிய விலங்குப் பொறிகள், 60 இரவ நேர கேமரா பொறிகள் மற்றும் பகல் இருமணி நேர தேடல்களில் மேற்படி எலியின குடித்தொகைக்குரிய எந்தவொரு பதிவுகளும் இல்லாதிருந்தமை அவதானிக்ப்பட்டுள்ளது.
இதிலிருந்து அவ்வினம் அழிவடைந்து போயுள்ளதாக Queensland பல்கலைக்கழக ஆய்வாளர் Luke Leung தெருவிக்கிறார்.
கடந்த 10 வருடங்களாக அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மீனவரொருவரின் தகவலின் படி இறுதியாக 2009 இலேயே Bramble Cay melomys இனத்துக்கான சான்று இருந்ததாக தெரியவருகிறது.
இவ்வினம் அழிந்து போனமைக்கு கடல்மட்ட உயர்வினால் அவற்றின் கீழ்மட்ட வாழிடங்கள் ஆட்கொள்ளப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கடல்மட்ட உயர்வுக்கு புவி வெப்பநிலை அதிகரிப்பும் மற்றும் காலநிலை மாற்றங்களே காரணம். இதுவே அவ்வினம் அழிந்து போனமைக்கு மூல காரணம் என Luke Leung கூறுகிறார். இதன்படி அவுஸ்திரேலியா தனக்குரிய இன்னொரு இனத்தையும் இழந்துள்ளது.
காலநிலை மாற்றத்தினால் அழிந்து போன முதல் எலி இனம்....
Reviewed by Author
on
June 16, 2016
Rating:

No comments:
Post a Comment