அண்மைய செய்திகள்

recent
-

கர்ப்பிணி பெண்ணின் உயிரை காப்பாற்றிய சிங்கப்பூர் ஹீரோ....


சிங்கப்பூரில் விபத்துக்குள்ளான கர்ப்பிணி பெண்ணின் உயிரை காப்பாற்றிய பள்ளி மாணவனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Yusun ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையில் உள்ள Yisun Ring Road சந்திப்பில், வைத்து இரண்டு கார்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த ரோட்டில் சென்றவர்கள் விபத்துக்குள்ளான இரண்டு கார்களையும் கண்டுகொள்ளாதவாறு சென்றுள்ளார்கள், இதில் ஒரு காரின் ஓட்டுநர், 32 வயதான Jocelyn Yu ஆவார்,

மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றில் மேலளாராக பணியாற்றும், இவர் 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார், விபத்துக்குள்ளான காரணத்தால் இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது, இது தவிர இவரது காரில் இருந்து பெட்ரோல் சிந்திய வண்ணம் இருந்ததால், கார் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், பள்ளி வகுப்பினை நிறைவு செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த Ashvin Gunasekaran, ஒரு வித வெடிக்கும் சத்தம் கேட்டதும் விரைந்து சென்று பார்த்ததில், Yu காருக்குள் இருந்து வெளிவர சிரமப்பட்டுள்ளார்.

உடனடியாக கார் கதவினை திறந்துவிட்டு, அவர் மருத்துவமனை செல்வதற்கு உதவி செய்துள்ளார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற Yu தற்போது நலமாக உள்ளார், மேலும் தனது வாழ்க்கை மற்றும் தனது குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றிய அஸ்வினுக்கு பரிசுப்பொருளையும் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அஸ்வினின் சகோதரி லாவா தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டதையடுத்து, அஸ்வின் தற்போது சிங்கப்பூரின் ஹீரோவாகியுள்ளான், பலரும் அவனது செயல் குறித்து பாராட்டியுள்ளனர்.

சிங்கப்பூர் கல்வித்துறையில் இருந்து அஸ்வினுக்கு பாராட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு துறையின் சார்பில் அஸ்வினுக்கு Public Spiritedness award வழங்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்ணின் உயிரை காப்பாற்றிய சிங்கப்பூர் ஹீரோ.... Reviewed by Author on June 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.