அண்மைய செய்திகள்

recent
-

அழுத்தம் கொடுப்பதை விடுத்து அமெரிக்கா, இலங்கையை பாராட்டுகிறது!- ஒக்லேன்ட் நிறுவகம்



இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகள், ஜெனீவா உடன்படிக்கையின் அமுலாக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று ஒக்லேன்ட் நிறுவகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனைவிடுத்து அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை ஜனாதிபதியின் செயற்பாடுகளை கண்ணை கொண்டு பாராட்டுகின்றன என்று அந்த நிறுவகத்தின் அண்மைய செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் முடிவடைந்து 7 வருடங்களாகியும் இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் தமது சொந்த இடங்களில் குடியேறாமல் இருந்து வருகின்றனர்.

உள்ளக இடப்பெயர்வு தொடர்பான நிலையத்தின் அறிக்கைப்படி ஆயிரக்கணக்கானோருக்கு இன்னும் மீளக்குடியேறல் தொடர்பில் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

இன்னும் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற அடிப்படையில் படையினரால் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் இவற்றை கருத்திற்கொள்ளாமல் முக்கியமான நாடுகள் இலங்கை அரசாங்கத்தை பாராட்டிக் கொண்டிருக்கின்றன.

ஓக்லேன்ட் நிறுவக செய்திக்குறிப்பின் ஆசிரியர்களான அநுராதா மிட்டால் மற்றும் எலிசபெத் ப்ராசர் ஆகியோரின் கருத்துப்படி, இடம்பெயர்ந்தோர் விடயத்தில் ஒரு சிறிய மாற்றமே ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாரிய ஏற்றுமதி சந்தையாக இருக்கும் நிலையில் அமெரிக்கா, உண்மையான நல்லிணக்கம் தொடர்பிலும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பிலும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் ஒக்லேன்ட் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அழுத்தம் கொடுப்பதை விடுத்து அமெரிக்கா, இலங்கையை பாராட்டுகிறது!- ஒக்லேன்ட் நிறுவகம் Reviewed by Author on June 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.