வட மாகாணத்தின் ஒரேயோரு விவசாய பாடசாலை பாதிக்கும்....தாண்டிக்குளத்தில் பொருளாதார மையம் அமைந்தால்!!!
தாண்டிக்குளத்தில் பொருளாதார மையம் அமைந்தால் வட மாகாணத்தின் ஒரேயோரு விவசாய பாடசாலை பாதிக்கும் என வவுனியா மாவட்ட விவசாயிகளின் சம்மேளனத்தலைவர் ரங்கன் தெரிவித்தார்.
வவுனியாவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா மாவட்டத்தில் 253 விவசாய அமைப்புக்களும் 8 கமநல கேந்திர நிலையங்களும் உள்ளன. இந் நிலையில் விவசாயிகளின் பிரச்சினையை தீர்மானிப்பது யார் என்பது தெளிவாக்கப்படவேண்டும்.
அந்த அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பே எமது அமைப்பு. பொருளாதார மத்திய நிலையமொன்று வவுனியாவில் அமைவதற்கான இடப்பிரச்சினையொன்று இடம்பெற்று வருகின்றது. ஒரு சிலர் நகரத்திற்கு அண்மையில் இந்நிலையம் அமையவேண்டும் என்பதனை முன்வைக்கின்றனர்.
ஆனால் யுத்தத்தின் காரணமாக இடப்பெயர்வுகளை சந்தித்த பின்னர் வவுனியா மாவட்டத்தின் நகர் புறம் சனநெரிசல் மிக்கதாக காணப்படுகின்றது. இந் நிலைமைகள் காரணமாக பல்கலைக்கழகம் வவுனியா நகரில் இருந்து 8 கிலோமீற்றருக்கு அப்பால் கொண்டு செல்லப்படடுள்ளது.
அதேபோல் தொழில்நுட்பக் கல்லூரி, ஆயுர்வேத வைத்தியசாலை என்பனவும் வவுனியாவிற்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்துடன் அரச குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படும்போதும் கூட ஏ9 வீதியில் ஓமந்தைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந் நிலையில் வட பகுதியில் அமைந்துள்ள ஒரேயொரு விவசாய பாடசாலைக்கு முன்பாகவே தற்போது பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தினை தருமாறு கோருகின்றர்.
இப்பாடசாலையில் 30 இருந்து 80 ஆக மாணவர்களை அதிகரிப்பதற்கான வேலைப்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது. எனவே இப்பாடசாலை மற்றும் இப்பிரதேசத்தின் சுற்றுச்சூழலில் 1500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசிக்கின்றன. எனவே இவை தொடர்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.
ஆகவே இவ்விடத்தில் வரக்கூடிய வாகன நெரிசல் மற்றும் வவுனியாவில் தற்போது ஏற்பட்டு வரும் விபத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். ஆகவே வவுனியாவிற்கு வரும் அபிவிருத்தி திட்டங்கள் நகருக்கு அருகில் வரவேண்டும் என எண்ணுவது சிறந்ததாக அமையாது.
அத்துடன் நெடுங்கேணி பிரதேசம் அதிகளவான விவசாயிகளை கொண்ட பிரதேசமாகும். ஆகவே அப்பகுதி விவசாயிகளுக்கும் கனகராயன்குளம் விவசாயிகள் உட்பட அதிகளவான விவசாயிகளை கொண்டமைந்த கிராமங்களுக்கு இலகுவான ஓர் இடமாக ஓமந்தை காணப்படுகின்றது.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற உண்ணாவிரதப்போராட்டத்திற்கு விவசாயிகள் எத்தனைபேர் கலந்துகொண்டனர் என்பது கேள்வியே. ஆகவே அனைத்து விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க ஓமந்தைப்பகுதிக்கே பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
வட மாகாணத்தின் ஒரேயோரு விவசாய பாடசாலை பாதிக்கும்....தாண்டிக்குளத்தில் பொருளாதார மையம் அமைந்தால்!!!
Reviewed by Author
on
June 28, 2016
Rating:

No comments:
Post a Comment