முதல் முறையாக தாய் நாட்டை பார்க்கும் சிறுவனின் நெகிழ்ச்சி தருணங்கள்!
உகாண்டாவை சேர்ந்த Criscent Bwambale பிறவியேலயே கண்புரை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளான்.
உகாண்டாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்து வந்த இவனது குடுபம்பத்தினரால் இவனுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.
6 வயதான இவனால், பள்ளிக்கு செல்ல முடியவில்லை, மேலும் சக சிறுவர்களோடு சேர்ந்து விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளான்.
இந்நிலையில் உகாண்டா மருத்துவ குழுவின் பரிந்துரையின் பேரில், Mbarara - இல் உள்ள Ruharo கண் மருத்துவமனையில் இவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இதன் மூலம் 6 வருடங்களுக்கு பிறகு இச்சிறுவன் தான் பிறந்த உகாண்டா நாட்டை பார்த்துள்ளான்,
பூக்களை ரசிப்பது, சிறுவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடுவது என இச்சிறுவனின் செயல்பாடுகளை, இவனது குடும்பதினர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
Ruharo மருத்துவமனை உகாண்டாவில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக கருத்தப்படுகிறது, இந்த மருத்துவமனையில் இதுவரை 368,000 கண்பார்வையற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் 18 மில்லியன் மக்கள் கண்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதல் முறையாக தாய் நாட்டை பார்க்கும் சிறுவனின் நெகிழ்ச்சி தருணங்கள்!
Reviewed by Author
on
July 08, 2016
Rating:
Reviewed by Author
on
July 08, 2016
Rating:


No comments:
Post a Comment