யூரோ கிண்ணம்: போலந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது போர்த்துக்கல்....
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்று நடந்த முதல் காலிறுதிப் போட்டியில் போர்த்துக்கல், போலந்து அணிகள் மோதின. இதில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் போலந்து அணியை வீழ்த்தி போர்த்துக்கல் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் யூரோ கிண்ண கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நடப்பு ‛சாம்பியன்' ஸ்பெயின் உள்ளிட்ட 16 அணிகள் வெளியேறி விட்டன.
இந்நிலையில் இன்று நடந்த முதல் காலிறுதி போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி, போலந்து அணியை சந்தித்தது.
போட்டி தொடங்கிய 5வது நிமிடத்திலேயே போலந்து அணிக்கு லிவான்டவுஸ்கி கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து போர்த்துக்கல் அணிக்கு 33வது நிமிடத்தில் ரினாடோ சான்சஸ் கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.
2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடும் முனைப்பில் ஆக்ரோஷமாக போராடின. ஆனால் இரு அணிகளும் கோல் போட முடியவில்லை.
இதன் பின் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. இதனையடுத்து ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது.
இதன் முடிவில் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்ச்சுக்கல் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
யூரோ கிண்ணம்: போலந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது போர்த்துக்கல்....
Reviewed by Author
on
July 01, 2016
Rating:
Reviewed by Author
on
July 01, 2016
Rating:


No comments:
Post a Comment