சமையல் பாத்திரத்தில் சிறுமியின் சடலம்! நரபலியாக இருக்கலாம் என சந்தேகம்..
சிறுமி ஒருவர் சமையல் பாத்திரம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தெளுங்கனூரைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியான மோகனவள்ளி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது திடீரென காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, குறித்த சிறுமியின் அயல் வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சமையல் பாத்திரம் ஒன்றில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சமையல் பாத்திரத்தினை சுற்றி குங்குமம் சிதறிக்கிடந்துள்ளது. இதன் காரணமாக குறித்த சிறுமி நரபலிக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் அயல் வீட்டாரான திருமூர்த்தி என்பவரை பொலிஸார் கைது செய்துள்ள அதேவேளை, மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
சமையல் பாத்திரத்தில் சிறுமியின் சடலம்! நரபலியாக இருக்கலாம் என சந்தேகம்..
Reviewed by Author
on
July 04, 2016
Rating:

No comments:
Post a Comment