அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு....


இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால் கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

இன்று காலை பத்து மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த நிறுவனத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் காணியிலேயே இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிர்மாணப்பணிகள், சாதனங்கள் வழங்கல், இயந்திரங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் போன்றவற்றுக்காக ஜேர்மன் அபிவிருத்தி வங்கியினால் 8.4 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டு ஒரு தொழிற்பயிற்சி நிறுவனமே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திறன்விருத்தி மற்றும் தொழிற்துறை அமைச்சர், அமைச்சின் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வடமாகாண ஆளுநர் ரெயிநோல்ட் குரே, இந்திய உயர்ஸ்தானிகர் நடராயன், பாராளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன், மஸ்தான், சித்தாத், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்துள்ளனர்.


கிளிநொச்சியில் இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு.... Reviewed by Author on July 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.