அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (09-07-2016) கேள்வி பதில்

கேள்வி:−

மதிப்பிற்குரிய வழக்கறிஞர் சுதன் அண்ணா அவர்களுக்கு..நான் மட்டக்களப்பு தேற்றாத்தீவிலிருந்து நர்மதா.அண்ணா!நான் உளவியல் ஆலோசகராக வர விரும்புகிறேன்.அதற்கான தகமை மற்றும் வழிமுறை பற்றி சொல்லுங்கள் அண்ணா!?

பதில்:−

அன்பான சகோதரியே!தங்களை நான் பாராட்டுகிறேன்.நிச்சயமாக உங்களது எண்ணம் நிறைவேற வாழ்த்தி ஆசிர்வதிக்கிறேன்.
உளவியல் ஆலோசகருக்கான அடிப்படை கல்வி தகுதியும், செயலில் கவனம்(Active listening)என்ற தகுதியும், உதவ வேண்டும் என்ற ஆர்வமும் உள்ள யார் வேண்டுமானாலும் நல்லதொரு உளவியல் ஆலோசகராக ஆகலாம்.
ஆனால் இதை ஒரு தொழிலாக செய்ய வேண்டுமென்றால் உளவியல் (Psychology), ஆற்றுப்படுத்துதல் & வழிகாட்டுதல் (Counseling & Guidance) சமூகப்பணி (Social Work)போன்ற ஏதாவது ஒரு படிப்பில் குறைந்தபட்சம் கலைமாணி பட்டம் (Post Graduation) பெற்றிருப்பா்.பொதுவாக உளவியல் ஆலோசகர்,In addition, Doctorate முடித்தவர்களோ Psychiatric Social workerகளோ அல்லது இதற்கென்று certificate courses உள்ளன – அதை முடித்தவர்கள்தான் ஆலோசகர்களாக பணியாற்ற முடியும்.அடுத்த முறை இது போன்று Counselling கொடுப்பவர்கள் யாரையும் அணுகினால் அவர்களின் கல்வித்தகுதியை தெரிந்துக்கொண்டு அணுகுங்கள்.

இருப்பினும் எனக்கு தெரிந்த சில கல்வி தகுதிகளை பட்டியலிடுகிறேன்.
1. Psychology, Counselling psychology, Applied Psychology, Counselling and Psychotherapists – Minimum Master Degree + M.Phil/ PH.D is value Added + Training
2. Social work in Psychiatry, clinical counselling – Master Degree + Training
3. PG Diploma Courses and Special Certification Courses – There are 50 +
4. Almost All the Medical Persons specially Psychiatry Doctors (MD/ MBBS, DPM ++)
அன்பான சகோதரியே! உளவிரல் ஆலோசகர் என்பது மிகவும் உணர்வு பூர்வமாக,மனித நேயத்துடன் செய்ய வேண்டிய பணியாகும்.
உளவியல் ஆலோசனையானது, நமக்கு வருகிற பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமோ காரியமோ நமக்கு பல நேரங்களில் புரிவதில்லை. பழியை- சந்தர்ப்ப சூழ்நிலை மேலும் அதிர்ஷ்டம் அல்லது ராசி சமாச்சாரங்கள் மீது போட்டு விட்டு நாம் நமது வேலையைப் பார்த்து கொண்டிருப்போம் . இல்லையெனில் நமக்கு எந்தவித பிரச்சினையுமில்லை என்று நம்மை நாமேஏமாற்றிக்கொண்டிருப்போம். இதை "சுய நியாயப்படுத்துதல்"(Self Justification) என்பார்கள் உளவியலில்..
நம்முடைய இந்த சுய நியாயப்படுத்துதலை (Self Justification) தவிர்த்து, நம்முடைய உண்மையான தவறுகளை அடையாளம் கண்டு கொள்வதே நல்ல உளவியல் ஆலோசகரின் வேலை.ஆகவே உண்மையிலே நல்ல கவுன்சலர்களை அடையாளம் காண்பது என்பது சிகிச்சையின் அடிப்படை தேவைகளில் ஒன்று.மிக முக்கியமான சில விஷயங்களை குறிப்பிடுகிறேன்

சிறந்த உளவியல் ஆலோசகர்களின்

தகைமைகள்(Qualifications of Good Counselor)

1.செயலில் கவனம்.(Active listening) – உங்கள் பிரச்சனைகள், உணர்வுகளைக் கூர்ந்து கேட்பவராக இருக்க வேண்டும்.நீங்கள் பேசிக்கொண்டிருக்க அவர் தனது தொலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க கூடாது.உங்களை முழுமையாக உங்கள் மனதிலிருப்பதை பேச விட வேண்டும்.எப்போடா வாய்ப்பு(Gap)கிடைக்கும் என்று காத்திருப்பது போல் இடையே பாயக்கூடாது.உங்களோடு தேவைபட்டால் மட்டுமே இடைபட வேண்டும்.

2. தீர்ப்பிடாமை(Non Judgmental)– ஒருவரை முழுமையாக அறிய முன் தீர்ப்பிடாதவராக இருக்க வேண்டும். உங்கள் பிரச்சினைகளை முழுமையாக அறியும் முன் நீ இப்படித்தான் இருப்பாய் என்று முடிவுக்கு வருவதோ உங்களை உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி நீ செய்தது தவறு என்று பழிப்பதோ கூடாது.
உங்கள் பிரச்சனைகளை வைத்து உங்களை தவறாக எடைபோடாமல்,உங்களின் மன ஓட்டங்களை அப்படியே உள்வாங்கி எந்தவித பாராபட்சமின்றி,உங்களுக்கு சரியான வழிகாட்டும் நல்ல மனம் உடையவர்தான் உளவியல் ஆலோசகர்.

3.பச்சோபதாபம் மற்றும் புரிதல்(Empathy and understanding uniqueness)– "ஒவ்வொரு தனிமனிதனும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள், தனித்தன்மை உடையவர்கள். ஆகவே ஒவ்வொரு தனிமனிதனின் பிரச்சனைகளும், மற்றவர்களின் பிரச்சனைகளிலிருந்து வேறுபட்டவை.” என உறுதியாக நம்புபவர்தான் சிறந்த உளவியல் ஆலோசகர்.தேவைப்படும் போது சில உளவியல் நுட்பங்களை பயன்படுத்தி உங்களின் தனித்தன்மையை மேம்படுத்தவும், உங்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், பின்னால் வரக்கூடிய பிரச்சனைகளை நீங்களே தடுத்துக் கொள்ளும் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துபவர்தான் உளவியல் ஆலோசகர்.

4.ஒரு நல்ல உளவியல் ஆலோசகரானவர் தனது ஆலோசனைகளை பாதிக்கப்பட்டவரிடம் நேரடியாகவே வழங்க வேண்டும்.மாறாக தனது அல்லது வேறு நபர்களின் புத்தகம் மற்றும் இறுவெட்டுக்களை வாங்கி படியுங்கள்,உன் பிரச்சனை சரி ஆகிடும் என்று கூறக்கூடாது.

5.உங்கள் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொல்ல வேண்டும்.உங்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும்.அதை விடுத்து"நீ எப்படி என்னிடம் கேள்வி கேக்கலாம்"?என்று கோபப்பட கூடாது. நான் சொல்றததான் நீங்க கேக்கணும் என்று உங்கள் கருத்துக்களை திணிக்கக் கூடாது

6.உங்களைப்பற்றிய விவரங்களை உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள கூடாது. உங்களுடன் உங்கள் பிரச்சனைத் தவிர தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்பவராக இருக்க கூடாது – தேவையில்லாத பிரச்சனையை அது தோற்றுவிக்கும்

7.நீங்கள் இரண்டாம் விருப்பம்(Second Opinion)வாங்க விரும்பினால் கண்டிப்பாக மறுக்க கூடாது.அவசியம் நேரிட்டால் உங்களை மன நல சிகிச்சைக்குப் பரிந்துரைக்க வேண்டும்.ஒரு நல்ல மருத்துவரை அறிமுகம் செய்ய வேண்டும்.  தகுந்த சிகிச்சை கிடைக்க தாமதிக்க கூடாது.


குறிப்பு 

 உங்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .
இன்றைய (09-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.