நடராஜா ரவிராஜ் படுகொலை - மூவருக்கு விளக்கமறியல்!
படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு முடிவிற்கு வரும் வரையில், மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்தஉத்தரவை இன்று காலை பிறப்பித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், 2006ஆம்ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் 6 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அறுவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் - மூவருக்கு விளக்கமறியல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் 6 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ரவிராஜ், 2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதியன்று கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோதும் அதில் மூன்று பேர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.
இவர்கள் மூவரும் விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்துசென்ற கருணா குழுவின் உறுப்பினர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட மூவரில் இருவர் கடற்படைவீரர்கள். ஒருவர் பொலிஸ்காரராவார்.
இந்த நிலையில் குறித்த 6 பேருக்கும் எதிராக கொலைக்கு உதவியமை மற்றும் கொலைக்கு திட்டமிட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைவீரர்கள் இருவர் மற்றும் பொலிஸ்காரர் ஒருவர் ஆகியோரின் விளக்கமறியலை விசாரணை முடியும் வரை நீதிபதி நீடிப்பு செய்தார்.
நடராஜா ரவிராஜ் படுகொலை - மூவருக்கு விளக்கமறியல்!
Reviewed by NEWMANNAR
on
July 21, 2016
Rating:

No comments:
Post a Comment