பூண்டிமாதா முன்பள்ளி விழையாட்டு நிகழ்வு - 2016-PHOTOS
மன்னார் பூண்டிமாதா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு கடந்த 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அருட்சகோ.ளு.நு.றெஜினோல்ட்ரூபவ் அதிபர்ரூபவ் புனித சவேரியார்ஆண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை), மன்னார் அவர்களும் சிறப்பு விருந்தினராக அருட்தந்தை ளு.தயாளன் கூஞ்ஞ புனித செபஸ்தியார் பேராலய உதவி பங்குத்தந்தைரூபவ் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.ஆ.சுரேஸ் அவர்களும் கலந்து ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வு எல்லோராலும் வியக்கும் வண்ணம் எமது சிறார்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டனர். அத்துடன் கண்கவர்உடற்பயிற்சி நிகழ்வும் சிறார்களினால் இடம்பெற்றது. இவ்வருடம் முதல் தடவையாக வேளாங்கன்னி மாதா இல்லம் சிகப்பு எனவும்ரூ,மடுமாதா இல்லம் பச்சை எனவும்பற்றிமா மாதா இல்லம் நீலம் எனவும் இல்லங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாகஇல்ல கூடாரங்கள் அமைக்கப்பட்டு புள்ளி வழங்கும் திட்டமும் இடம்பெற்றது.
இதில் பெற்றோர் மிகுந்த ஆர்வத்துடனும்ஒற்றுமையுடனும் செயற்பட்டு திறம்பட இந்நிகழ்வை செய்துமுடித்தனர். ஆத்துடன் அன்னையருக்கானதும் தந்தையருக்கானதும்அழைக்கப்பட்ட விருந்தினருக்கானதும் முன்பள்ளி ஆசிரியருக்கானதும்ரூபவ் முன்பள்ளி பழைய மாணவர்களுக்கானதும்
என விளையாட்டுக்கள் இடம்பெற்று மிகவும் சிறப்பாக விளையாட்டு நிகழ்வு நடந்து முடிந்தது. இந்நிகழ்வானது முன்பள்ளி முகாமைத்துவகுழு நெறிப்படுத்தலில் செய்து முடிக்கப்பட்டது.
முன்பள்ளி முகாமைத்துவ குழு,
பூண்டி மாதா முன்பள்ளி,
எமில்நகர்
மன்னார்.
பூண்டிமாதா முன்பள்ளி விழையாட்டு நிகழ்வு - 2016-PHOTOS
Reviewed by NEWMANNAR
on
July 12, 2016
Rating:

No comments:
Post a Comment