மன்னார் நகர சபையினால் வழங்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் பலவற்றிற்கு பணம் செலுத்தாமையினால் மூட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு-Photos
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் மன்னார் நகர சபையினால் வழங்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கான மிகுதி பணத்தை குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் வழங்காத நிலையில் குறித்த வர்த்தக நிலையங்களை மன்னார் நகர சபை மூடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்று செவ்வாய்க்கிழமை(12) காலை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும் குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் குறித்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபைக்கு அருகில் இயங்கி வந்த மன்னார் தினச்சந்தை வியாபார நிலையம் கடந்த 01-03-2012 அன்று திடீர் தீ விபத்தின் காரணமாக எறிந்து சாம்பளாகியது.
இதனால் குறித்த சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த வர்த்தகர்கள் பல்வேறு அசௌகரிங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
-இந்த நிலையில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்திற்கும் மன்னார் சிறுவர் பூங்காவிற்கும் இடையில் மன்னார் நகர சபையினால் 27 கடைகள் அமைக்கப்பட்டு பதீக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.
-அதில் 6 வர்த்தகர்கள் குறித்த கடையினை முழுத்தொகையினையும் செலுத்தி சொந்தமக்கியுள்ளனர்.
எனினும் ஏனைய 21 வர்த்தக நிலைய உரிமையாளர்கள் 2 இலட்சம் ரூபாவினை செலுத்திய போதும் மிகுதி 3 இலட்சம் ரூபாய் பணத்தை செலுத்தாத நிலையில் அசமந்த போக்குடன் செயற்பட்டள்ளனர்.
-இந்த நிலையில் மன்னார் நகர சபை அதிகாரிகள் இன்று செவ்வாய்ககிழமை(12) காலை குறித்த சந்தை பகுதிக்குச் சென்று மிகுதி பணத்தை செலுத்தாத வர்த்தக நிலையாங்களை மூட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் வர்த்தகர்களுக்கும்,நகர சபை அதிகாரிகளுக்கும் இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் குறித்த வர்த்தகர்கள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பாதீக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் மன்னார் நகர சபையின் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
-இதன் போது மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் பிரிட்டோ சம்பவ இடத்திற்கு வந்து வர்த்தகர்களுடன் கலந்துரையாடியதோடு வடமகாண சபை உறுப்பினருடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் வேண்டுகோளுக்கு இனங்க குறித்த வர்ததக நிலையங்களை மூடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதோடு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
குறித்த சம்பவம் குறித்து மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் பிரிட்டோ அவர்களிடம் வினவிய போது,,,,,
மன்னார் நகர சபைக்கு அருகில் இயங்கி வந்த மன்னார் தினச்சந்தை வியாபார நிலையம் கடந்த 01-03-2012 அன்று திடீர் தீ விபத்தின் காரணமாக எறிந்து சாம்பளாகியது.
இதனால் குறித்த வர்ததக நிலையங்களில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த வர்த்தகர்கள் பல்வேறு அசௌகரிங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்திற்கும் மன்னார் சிறுவர் பூங்காவிற்கும் இடையில் மன்னார் நகர சபையினால் 27 கடைகள் அமைக்கப்பட்டு பாதீக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் போது இரண்டு வர்த்தக நிலையங்கள் 8 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வீதம் ஏலத்திற்கு விடப்பட்டது.இதனை வர்ததகர்கள் இருவர் பெற்றுக்கொண்டனர்.
மேலும் 4 வர்த்தக நிலையங்களை 5 இலட்சம் ரூபாய் வீதம் முழு தொகையும் செலுத்தப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்டது.
ஏனைய 21 வர்த்தக நிலையங்கள் பாதீக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.
முழுத்தொகை 5 இலட்சமாக காணப்பட்ட போதும் குறித்த 21 வர்த்தகர்களும் 2 இலட்சம் ரூபாவினை வழங்கி ஒரு வருட தவணையில் மிகுதி 3 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்குவதாக ஒப்பந்தம் செய்த நிலையில் குறித்த வர்த்தக நிலையங்கள் வழங்கப்பட்டது.
எனினும் நீண்ட காலமாகியும் குறித்த பணத்தை வழங்க அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற மன்னார் நகர சபையின் அதிகாரிகள் மிகுதி பணத்தை செலுத்தாத வர்த்தக நிலையங்களை மூடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் குறித்த வர்த்தகர்கள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் சட்பவ இடத்திற்கு வந்த மாகாண சபை உறுப்பினர் வர்த்தகர்களுடன் கலந்துரையாடியதோடு, வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளருடன் தொலைபேசி ஊடாக குறித்த பிரச்சினை குறித்து கலந்துரையாடினார்.
-இவ்விடையம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுவதாக மாகாண சபை உறுப்பினர் உறுதி வழங்கியமைக்க அமைவாக ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
-குறித்த வர்த்தக நிலையங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சரினால் ஒப்பந்தத்திற்கு அமைவாக முழுத்தொகையினையும் செலுத்தாத வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாகவும்,உள்ளுராட்சி ஆணையாளரின் கடிதத்தின் பிரகாரமே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக மன்னார் நகர சபையின் செயலாளர் தெரிவித்தார்.
மன்னார் நகரைச் சேர்ந்த 7 ஆயிரம் குடும்பங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட வரிப்பணம் மூலம் அமைக்கப்பட்ட கடைத்தொகுதியினை தனிப்பட்ட முறையில் எவறுக்கும் வழங்கப்பட முடியாது.
எதிர் காலத்தில் மக்கள் நகர சபையிடம் கேல்வி எழுப்பும் சந்தர்ப்பம் ஏற்படும்.முழுத்தொகையினை செலுத்திய ஏனைய வர்த்தகர்களுக்கும் நாம் பதில் சொல்லும் நிலை ஏற்படும்.
குறித்த 21 வர்ததக நிலையங்களில் குறிப்பிட்ட சிலரே தொடர்ந்தும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏனையவர்கள் அதி கூடிய வாடகைக்கு வர்த்தக நிலையங்களை பரிதொரு நபர்களிடம் கொடுத்து விட்டு உள் நாட்டிலும்,வெளி நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த வர்ததக நிலையங்கள் மன்னார் நகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிரான நடவடிக்கை எனவும்,குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக வெகு விரைவாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் பிரிட்டோ மேலும் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையினால் வழங்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் பலவற்றிற்கு பணம் செலுத்தாமையினால் மூட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
July 12, 2016
Rating:

No comments:
Post a Comment