அண்மைய செய்திகள்

recent
-

அகதிகளை மறுத்த சுவிஸ் மேயரை புரட்டிப் போட்ட கீரிஸ் முகாம்!


சுவிட்சர்லாந்தில் அகதிகளை ஏற்றுக்கெள்வதற்கு மாறாக அபராதம் செலுத்த ஆதரவு தெரிவித்த மேயர் ஒருவர், தற்போது அகதிகள் முகாமிற்கு மேற்கொண்ட பயணத்தின் மூலம் மனம் வருந்தி தன் நிலையில் இருந்து முழுமையாக மாறி தனது கருத்துகளிலிருந்து பின்வாங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Oberwil-Lieli கிராமத்தின் மேயர் ஆன்ட்ரியாஸ் கிளார்நரே இவ்வாறு தன் நிலையில் இருந்து முழுமையாக மாறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் பணக்கார கிராமங்களின் ஒன்றான Oberwil-Lieli கிராம மக்கள், கடந்த மே மாதம், பத்து அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு மாறாக 290,000 பிராங்க் அபராதமாக செலுத்த ஆதரவு அளித்து வாக்களித்தனர்.

இதற்கு அக்கிராமத்தின் மேயர் ஆன்ட்ரியாஸ் கிளார்நர் முழு ஆதரவு தெரிவித்திருந்தார். மேலும், சுவிஸ் தலைநகர் விதிக்கும் அகதிகள் சார்பு கட்டளைகளை சுவிஸ் குடிமக்கள் எதிர்க்க வேண்டும், சுவிஸின் அனைத்து எல்லைகளை சுற்றியும் முட்கம்பி அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சூரிச் சார்ந்த நாவலாசிரியர் ஆண்ட்ரியா பிஷ்ஷர் ஸ்கல்தெஸ், அடைக்கலம் கோரும் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளை, ஒரு முறை அகதிகள் முகாமிற்கு சென்று அகதிகளை சந்திக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

நாவலாசிரியரின் வற்புறுத்தலை தொடர்ந்து, இந்த வாரம் மேயர் ஆன்ட்ரியாஸ் கிளார்நரே, கீரிஸில் உள்ள அகதிகள் முகாமிற்கு நேரில் சென்று அங்குள்ள அகதிகளின் நிலையை கண்டுள்ளார்.

இதற்கு பின்னர் அவர் கூறியதாவது, அகதிகளின் மனிதாபிமானமற்ற நிலையை கண்டு நான் மனம் வருந்துகிறேன்.

மக்கள் இவ்வாறான நிலையில் பல காலமாக வாழந்து வருவது மிருகத்தனமானது. நாம் முன்பு செய்ததை விட இன்னும் பல மடங்கு உதவிகள் செய்ய வேண்டும்.

ஐரோப்பியாவில் உள்ள அகதிகளுக்கு களத்தில் இருந்து உதவி வரும் முகவர்களுக்கு இன்னும் அதிக பணம் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அகதிகளை மறுத்த சுவிஸ் மேயரை புரட்டிப் போட்ட கீரிஸ் முகாம்! Reviewed by Author on July 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.