ஐ.நா. பொது செயலாளர் போட்டியில் முன்னிலை வகிப்பது யார்? விபரம் உள்ளே,,,,
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் அவர்களின் பதவி காலம் இவ்வாண்டுடன் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்த பொது செயலாளரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன.
இந்நிலையில் அடுத்த பொது செயலாளர் பதவிக்கு 12 பேர் போட்டியிட்ட நிலையில் இரகசிய வாக்கு பதிவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, வாக்கு பதிவில் போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் முன்னிலை வகிப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவருக்கு அடுத்தபடியாக ஸ்லோவேனியாவின் முன்னாள் அதிபர் டேனிலோ துர்க் இருக்கும் நிலையில், மூன்றாவது இடத்தில் தற்போதைய யுனெஸ்கோ தலைமை இயக்குநர் இரினா பொகோவா இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரினா பொகோவா பல்கேரியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இரகசிய வாக்கு பதிவு தொடர்பில் கருத்து தெரிவித்த ஐ.நா பாதுகாப்பு சபையின் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வாக்கெடுப்பு முடிவுகள் குறித்த விபரங்கள், ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் சார்ந்த நாடுகளின் ஐ.நா.வுக்கான தூதர்கள் மூலமாக இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக ஐ.நா. பொதுக் குழு உறுப்பினர்கள், தூதர்கள், செய்தியாளர்கள் முன்னிலையில் தாங்கள் ஏன் பொதுச் செயலாளராக விரும்புகிறோம் என்று போட்டியாளர்கள் விளக்கம் அளித்திரந்தனர்.
அத்துடன், பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் முன்னிலையிலும் அவர்கள் தனித்தனியாக "நேர்காணலில்' கலந்து கொண்டனர்.
அதிகாரப்பூர்வமற்ற குறித்த நேர்காணல், இதுவரை நடந்திராத ஒன்று என ஐ.நா பாதுகாப்பு சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கான போட்டியில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படும் அன்டோனியோ குட்டெரெஸ், ஏற்கெனவே ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் தலைவராக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. பொது செயலாளர் போட்டியில் முன்னிலை வகிப்பது யார்? விபரம் உள்ளே,,,,
Reviewed by Author
on
July 23, 2016
Rating:

No comments:
Post a Comment