அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தோட்டவெளியில் சகோதரி தூக்கிட்டு தற்கொலை......படம் இணைப்பு....


மன்னார் தோட்டவெளியில்   சகோதரி தூக்கிட்டு தற்கொலை  செய்துகொண்டாள்.....  நேற்று  மாலையில்   நடந்த சம்பவம் வீட்டில்  யாரும் இருக்கவில்லை  காதலித்தவன்  தன்னை ஏமாற்றியதால் மனமுடைந்து நிலையிலே பெயர்  தர்ஷினி  வயது 26 காமன்சில  வேலை   செய்துவந்தவேளையில்....

மேலும் சம்பவம் தொடர்பாக.........


பொருளாதார பிரச்சினை காரனமாக தாய் கூலி வேலைக்கு செல்வது வழக்கம் சம்பவதினமான நேற்று கூலிவேலைக்கு சென்று திரும்பிய நேரத்தில் மாலை 4- 30 மணியளவில் குறித்த பெண் வீட்டு  விறாந்தையில்  தொங்கியபடி   தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார்.


மேலும் சம்பவம் தொடர்பாக தந்தையை  இழந்து  தாயின் பராமரிப்பில்  வளர்ந்த  பிள்ளை தாய்   கூலி  வேலைதான்   மூன்று  பெண் பிள்ளைகள்  இவள்  முத்தவள்  காதலித்து  ஏமாற்றியவனுக்கு நேற்று வேறு பெண்ணுடன்  பதிவு திருமணம் நடந்ததையிட்டு  ஏமாற்றத்தை  தாங்கிக்க சக்தியில்லாத நிலையிலே  தூக்கிட்டு தற்கொலை  செய்துகொண்டுள்ளார்.


காதலித்து ஏமாற்றியதாக கூறப்படும் நபர் 5ம் கட்டையைச்சேர்ந்தவர் மன்னார் CTBல் மெக்கானிக் வேலை செய்துவருவதாகவும் இவரின் பேரில் ஏற்கனவே முன்பு தன்னை  காதலித்து  ஏமாற்றி விட்டான்  என  பொலிசில் முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டு விசாரனை நிலுவையில் உள்ள நிலையிலே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார்  இறந்த பெண்ணின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொதுவைத்தியசாலையில் அனுமதித்ததோடு மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு-மன்னாரில் தற்போது அதிகரித்துள்ள இவ்வாறான ஏமாற்று வேலைகள்  பழிவாங்கல்கள் இன்னும் பல வழிகளில் சீரழியும் எமது இளம்சமூகத்தின் அதுவும் குறிப்பாக இளம் பெண்கள்  சீரழிக்கப்படுகிறார்கள் பெற்றோர் பெரியோர்  பொதுமக்கள் அனைவரும் விழிப்புனர்வு பெறவேண்டும் பொலிசார் மற்றும் அரச அதிகாரிகள் சம்ந்தப்பட்டவர்கள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்தால் இவ்வாறான அசம்பாவிதங்களை தடுக்கலாம்.....இல்லையேல் கொலைகள் தொடரத்தான் செய்யும்........யார்....பொறுப்பு.....??????

-மன்னார்விழி-






மன்னார் தோட்டவெளியில் சகோதரி தூக்கிட்டு தற்கொலை......படம் இணைப்பு.... Reviewed by Author on August 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.