மன்னார் கீரி அருள் மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயவருடாந்த அலங்கார உற்சவ விழா..படங்கள் இணைப்பு
மன்னார் கீரி அருள் மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயவருடாந்த அலங்கார உற்சவ விழா..
நிகழம் மங்களகரமான துர்முகி வருடம் ஆடிமாதம் 09ம் நாள் 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை வரும் உத்ரிரட்டாதி நட்சத்திரமும் பஞ்சமி திதியும் சித்தாமிர்த யோகமும் கௌலவகரணமும் கூடிய சுபநன்நாளில் பூர்வாங்க கிரிகைகளுடன் ஆரம்பமாகி பத்து நாற்கள் தினமும் மாலை ஆறு மணிக்கு விஷேட ஸ்நபன அபிஷேகமும் மூலஸ்தான பூசையும் அதனைத் தொடர்ந்து வசந்தமண்டப பூசையும் நடைபெற்று.
இன்று 10ம் நாள் 02-08-2016 செவ்வாய்க்கிழமைஆடி அமவாசை திதிநன்நாளில் காலை ஆறு மணிக்கு கீரி சந்தி ஆலடிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காவடி பால்குடம் கற்பூரச்சட்டிபவனியாக எடுத்துவரப்பட்டு காலை 7-00மணிக்கு 108அஷ்டோத்திர சற்காபிஷேகம் நடைபெற்று சுவாமி கீரி திருக்கடலில் எழுந்தருளி சிறப்பாக தந்தையை இழந்தவர்கள் தங்களின் கடமையினை நிறைவேற்றும் சடங்கு கடலில் தீர்த்தம் கொடுத்தலும்(வருடா வருடம் சிறப்பாக நடைபெறும் கீரி திருக்கடலில்) அதனைத்தொடர்ந்து அகேஸ்வரப்பூசையும் அன்னதானமும் இடம்பெற்றதோடு மாலை ஆறு மணிக்கு விஷேட வசந்த மண்டப பூசையும் அதனைத்தொடர்ந்து முருகப்பெருமான் தேரில் வலம் உள்விதியுலாவும் வெளிவிதியுலாவும் வந்து பக்தகோடிகளை அருள்கடாட்சம் வழங்கினார்….
மன்னார் கீரி அருள் மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயவருடாந்த அலங்கார உற்சவ விழா..படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
August 02, 2016
Rating:
No comments:
Post a Comment