மிஸ்டர் சேரன்... தமிழகத்தின் 18,000 திருட்டு டிவிடி கடைகளும் ஈழத் தமிழர்களால் நடத்தப்படுகிறதா? -Video
திருட்டி டிவிடி விவகாரத்தில் ஈழத் தமிழர்கள் மீது குற்றம்சாட்டிய இயக்குநர் சேரனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 18,000 திருட்டு டிவிடி கடைகளையும் ஈழத் தமிழர்களா நடத்துவது? என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பபட்டுள்ளது.
மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'கன்னா பின்னா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சேரன் பேசுகையில், தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது.. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான் என்று அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.. எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது எனக் கூறியிருந்தார்.
சேரனின் இந்த பேச்சு ஈழத் தமிழர்களை மட்டுமின்றி தமிழகத் தமிழர்களையும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான விமர்சனங்கள் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சேரனைக் கண்டித்து எழுதியுள்ளதாவது: தமிழ்நாட்டுல இருக்கிற 18000 திருட்டு டிவிடி கடைகளும் இலங்கைத் தமிழர்கள்தான் நடத்துகிறார்களா சேரன்? போர்க்களத்தில் சாவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்த ஈழத்தமிழர்களுக்காக..நீங்கள் ஒருநாள் போராடியதை அவமானமாகக் கருதுகிறீர்கள்.? ஆனால் நம் தமிழ் திரையுலகின் ஏ ஆர் ரஹ்மான், இளையராஜிவில் இருந்து நேற்று வந்த சூப்பர் சிங்கர்கள் வரை அத்தனை நடிகர் நடிகைகளும் வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தி பணம் சம்பாதிப்பது இலங்கை தமிழர்கள் இடமிருந்துதான். அப்ப அதுக்கும் அவமானப்படுங்கள் சேரன். நம் ஊரில் வியாபாரத்தை சரி செய்யாமல், திரையரங்குகளை சரி செய்யாமல்,தொலைக்காட்சி உரிமைகளை சரி செய்யாமல் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை சரி செய்யாமல் வெளிநாட்டு உரிமை மொத்தமாக நான்கே பேரிடம் கால காலமாக சிக்கிக் கொண்டு தவிப்பதை சரி செய்யாமல்..பிரச்னையின் ஆழத்தை புரிந்து சரி செய்ய முயற்சிக்காமல் பாவப்பட்ட பரிதாபத்துக்குரிய ஈழத்தமிழர்களை குற்றம் சொல்வது..முட்டாள்தனம் சேரன்.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி செத்து விடுவமோ என்ற பயத்தில் ரொட்டியை திருடியவனைக் கட்டி வைத்து அவனை ஆட்களை ஏவி அடித்துவிட்டு,என் வீட்டு வைர நகையை திருடிவிட்டான் என்று அபாண்டமாக பழியை போடும் பணக்கார அரக்கத்திமிர் உங்கள் வார்த்தைகளில் தெறிக்கிறது. உங்கள் வார்த்தைகளை உங்களுடையதாக மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள்.
ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் கருத்தும் இதுதான் என்று பதிவு செய்ய நினைக்காதீர்கள். இவ்வாறு விஜயபத்மா எழுதியுள்ளார்.
மிஸ்டர் சேரன்... தமிழகத்தின் 18,000 திருட்டு டிவிடி கடைகளும் ஈழத் தமிழர்களால் நடத்தப்படுகிறதா? -Video
Reviewed by NEWMANNAR
on
August 26, 2016
Rating:

No comments:
Post a Comment