தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி! பிரித்தானிய கடற்கரையில் பாதுகாப்பு அதிகரிப்பு.....
பிரித்தானிய கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து இலங்கைத் தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை குறித்த கடற்கரைக்குச் சென்ற கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோர் புதைமணலில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் குறித்த கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ராதர் கவுன்சில் அறிவித்துள்ளது.
அங்கு வரும் மக்களுக்கு உறுதியளிக்கும் நோக்கிலும், அவர்களுக்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கவும் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் அங்கு நிறுத்தப்படுவதாக அந்தக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கேம்பர் கடற்கரையில் போதிய உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் விமர்சனம் செய்துள்ளன.
குறித்த கடற்கரை பாதுகாப்பானது என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என ராதர் கவுன்சில் உறுப்பினர் சாலி ஆன் ஹார்ட் கூறுகிறார்.
தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி! பிரித்தானிய கடற்கரையில் பாதுகாப்பு அதிகரிப்பு.....
Reviewed by Author
on
August 27, 2016
Rating:
Reviewed by Author
on
August 27, 2016
Rating:


No comments:
Post a Comment