அண்மைய செய்திகள்

recent
-

பாகிஸ்தானில் பெண் வயிற்றில் உலோக பொருட்கள்: 4 மணி நேரமெடுத்து நீக்கம்....


பாகிஸ்தான் நாட்டில் பெண்ணிற்கு நடந்த அறுவை சிகிச்சையில் வயிற்றிலிருந்து ஹேர்பின், நகம் மற்றும் கண்ணாடி துண்டு உட்பட 22 உலோக பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் குர்ராம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கதக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடுமையான வயிற்றுவலியின் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், மருத்துவர்கள் அவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் ஹேர்பின், பெரிய நகங்கள் மற்றும் கண்ணாடி துண்டுகள் என மொத்தம் 22 பொருட்கள் வயிற்றுக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்பு, 4 மணி நேரம் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் வயிற்றில் இருந்த 22 பொருள்களும் அகற்றப்பட்டன. தற்போது அந்த பெண்ணின் உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போல, சமீபத்தில் அமிர்தசரஸில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இரண்டு மாத காலமாக கத்தியை சாப்பிட்டதாக அவர் வயிற்றில் இருந்து 40 கத்திகள் அகற்றப்பட்டது குறிப்பிடதக்கது.

பாகிஸ்தானில் பெண் வயிற்றில் உலோக பொருட்கள்: 4 மணி நேரமெடுத்து நீக்கம்.... Reviewed by Author on August 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.