காணாமால் போனவர்களுக்காக குரல் கொடுப்போம்! பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.....
காணாமால் போனவர்களுக்கான அனைத்துலக நாளினை முன்னிட்டு பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி காணாமால் போனவர்களுக்கான அனைத்துலக நாளாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பில் காணாமால் போனவர்களுக்கான குரலாக இக்கவனயீர்ப்பு போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்கு செய்துள்ளது.
பிரித்தானிய பிரதமரின் வாயில் தளத்தில் 10 Downing Street, London, SW1A 2AA எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை இடம்பெறவுள்ளது.
காணாமால் போனவர்களுக்காக குரல் கொடுப்போம்! பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.....
Reviewed by Author
on
August 27, 2016
Rating:

No comments:
Post a Comment