அண்மைய செய்திகள்

recent
-

வாகன விபத்தால் நாள் ஒன்றுக்கு 8 பேர் பலி!


நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வாகன விபத்தால் நாள் ஒன்றுக்கு 8 பேர் வரை உயிரிழப்பதாக வீதிப் போக்குவரத்து பர்துகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

விபத்தினால் காயமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைத்து நாட்டின் அபிவிருத்திக்கு தேவைப்படும் மில்லியன் கணக்கான நிதி எம்மை விட்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் அது சமூகத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜுலை மாதம் 31ஆம் திகதி வரை 1568 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் 1632 பேர் உயிரிழந்திருப்பதுடன், மோட்டார் சைக்கிள் விபத்து 666 என்றும், இதில் 686 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வாகன் விபத்துக்களின் போது இளைஞர்களே அதிகமாக உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான விபத்துக்களால் நாடு பொருளாதார ரீதியில் நட்டத்தை எதிர்நோக்குவதாகவும், விபத்தினால் காயமடைபவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கே பாரிய நிதி செலவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிதியினைக் கொண்டு கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்ய முடியும். சரியான முறையில் தலைக்கவசம் அணியாமையே மோட்டார் சைக்கிள் விபத்துக்களின் போது அதிக உயிரிழப்பு ஏற்பட காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகன விபத்தால் நாள் ஒன்றுக்கு 8 பேர் பலி! Reviewed by Author on August 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.