பிரித்தானிய இளவரசர் வில்லியமை கண்கலங்க வைத்த சிறுமியின் கேள்வி....
பிரித்தானிய நாட்டில் தாயை இழந்த சிறுமி ஒருவரின் கேள்வியால் இளவரசரான வில்லியம் கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்டு பேசியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தின் Bedfordshire நகரில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்து வரும் மையம் ஒன்றிற்கு அந்நாட்டு இளவரசரான வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் நேற்று விஜயம் செய்துள்ளனர்.
இதே மையத்தில் புற்றுநோயால் தாயை இழந்த 14 வயது வயது சிறுமி ஒருவர் இளவரசர் வில்லியமிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
புற்றுநோயால் எனது தாயை கடந்தாண்டு இழந்துவிட்டேன். இந்த இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் உங்களுடைய தாயை இழந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுமியின் கேள்வியால் சிறிது கண்கலங்கிய இளவரசர் வில்லியம், எனது தாயை இழந்து 20 வருடங்கள் ஆகிறது. ஆனாலும், ஒவ்வொரு நாளும் அவரை நினைத்து வாடிக்கொண்டு இருக்கிறேன்.
தாயை இழக்கும் வேதனை எனக்கும் தெரியும். இந்த இழப்பை நீயும் நானும் எதிர்கொள்ளத்தான் வேண்டும் என சிறுமிக்கு இளவரசர் வில்லியம் உருக்கமாக பதிலளித்துள்ளார்.
இளவரசர் வில்லியமின் இந்த உருக்கமான பதில் அங்குள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானிய முன்னாள் இளவரசியும் வில்லியமின் தாயாருமான டயானா கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் திகதி பாரீஸில் நிகழ்ந்த கார் விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய இளவரசர் வில்லியமை கண்கலங்க வைத்த சிறுமியின் கேள்வி....
Reviewed by Author
on
August 28, 2016
Rating:

No comments:
Post a Comment