சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டேர் தினத்தையொட்டி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்.(படம்)
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டேர் தினத்தையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை(30) காலை மன்னாரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து அமைதி போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
-போரினால் பாதீக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிளயவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
-காணாமல் போன,கடத்தப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
-குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அருட்தந்தை ஜெகதாஸ்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்,மன்னார் நகர சபையின் முன்னால் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ்,மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி மஹாலட்சுமி குருசாந்தன் மற்றும் காணாமல் போன கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த அமைதி கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை தேசிய நல்லிணக்க பொறிமுறைக்கான வலய செயலனியின் செயலாளரிடம் குறித்த மகஜரை கையளித்தனர்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டேர் தினத்தையொட்டி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்.(படம்)
Reviewed by Author
on
August 30, 2016
Rating:

No comments:
Post a Comment