அண்மைய செய்திகள்

recent
-

சிந்து பெற்ற பதக்க மதிப்பு எவ்வளவு?


ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற சிந்துவுக்கு நாடு முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதற்கிடையில் அவர் பெற்ற பதக்க மதிப்பு குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் பதக்கங்களின் விலை மற்றும் தயாரிக்கப்பட்ட உலோகம் அதன் மதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்த பதக்கம் 2,488 ஆகும் . தங்கம் 812, வெள்ளி 812. வெண்கலம் 864.

இதில் தங்க பதக்கம் என்பது முழுவதும் தங்கத்தாலானது அல்ல. அதாவது 93 சதவீத வெள்ளியும், 6 சதவீத செம்பும், ஒரு சதவீதம் மட்டுமே தங்கம்.

494 கிராம் வெள்ளியும், 6 கிராம் தங்கமும் கலந்து இந்த பதக்கம் செய்யப்பட்டிருக்கும். இந்த தங்க பதக்க மதிப்பு ரூ.43 ஆயிரத்து 237 ஆகும்.

இதுபோல் வெள்ளி முழு வெள்ளியால் ஆனது அல்ல. வெள்ளி 92. 5 சதவீதம் ஆகும். 7.5 சதவீத செம்பும் கலந்திருக்கும். வெள்ளி பதக்க மதிப்பு ரூ.22 ஆயிரத்து 155. வெண்கலம் 97 சதவீத செம்பு கலந்து செய்யப்பட்டிருக்கிறது.

இதன் மதிப்பு ரூ. 335 ஆகும் . ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கான மொத்தம் 5 ஆயிரத்து 130 பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரியோவில் உள்ள பிரேசில் நேஷனல் மின்ட் என்ற நிறுவனத்தில் இந்த பதக்க தயாரிப்பில் 80 பேர் ஈடுபட்டனர். ஒரு பதக்கம் தயாரிக்க 2 நாட்கள் செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்து பெற்ற பதக்க மதிப்பு எவ்வளவு? Reviewed by Author on August 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.