மன்னார் பொது வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட வரும் பொது மக்களுக்கு பாஸ் நடைமுறை. வைத்தியசாலை பணிப்பாளர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் மருத்துவ நலன் பேனுவதில் வைத்திய ஊழியர்கள் சிரமத்தை எதிர் நோக்காதிருக்கு முகமாக நோயாளர்களை பார்வையிடும் பொது மக்களின் தொகையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நாளாந்தம் அதிகமான நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நிலை உருவாகி வருகின்றன. இந்த நிலையில் நோயாளர்களை வைத்தியசாலையில் பார்வையிடும் நேரத்தில் ஒரு நோயாளரை பார்வையிடுவதற்காக கணக்கற்ற பொது மக்கள் வருகை தருவதால் வைத்தியசாலை வாட்களில் பல சமயங்களில் நோயாளர்கள் மட்டுமல்ல நோயாளர்களை கவனிக்கும் வைத்திசாலை ஊழியர்களும் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக வைத்தியசாலை நிர்வாகத்துக்கு முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து எதிர்காலத்தில் நோயாளர்களை பார்வையிடும் பொதுமக்களின் தொகை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட இருப்பதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி திருமதி எஸ்.ஆர்.யூட் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் முதலாம் திகதி (01.09.2016) முதல் அமுலுக்கு வரும் இவ் புதிய திட்டத்தின்படி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு நோயாளரை பார்வையிடவரும் பொதுமக்களில் இருவருக்கு மட்டுமே பாஸ் முறைப்படி அனுமதி வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் செயல்பாடு நோயாளர்களை பார்வையிட வரும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அசௌரியங்களாக இருந்தாலும் நோயாளர்களை வைத்தியசாலையில் கவனித்து வரும் வைத்தியசாலை ஊழியர்கள் இவர்களை சிறந்த முறையில் கவனிக்க ஏதுவாகும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் பொது வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட வரும் பொது மக்களுக்கு பாஸ் நடைமுறை. வைத்தியசாலை பணிப்பாளர்
Reviewed by Author
on
August 21, 2016
Rating:

No comments:
Post a Comment