அண்மைய செய்திகள்

recent
-

பேராதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்!


பேராதனை பல்கலைக்கழத்தில் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட முதலாம் வருட தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறிஞ்சிக் குமரன் ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு விடுதிக்கு திரும்பிச் செல்லும் பாதையில் வைத்து இரண்டாம் வருட மாணவர்களினால் இவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாக சக மாணவிகளின் உதவியுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 மாணவர்களில் 2 மாணவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பேராதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்! Reviewed by Author on August 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.