அண்மைய செய்திகள்

recent
-

300 ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் சிறுமியின் சடலம்: திடீரென கண் விழித்ததால் பரபரப்பு....


மெக்ஸிகோ நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று திடீரென கண் விழித்து பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோவில் உள்ள Jalisco நகரில் Guadalajara என்ற தேவாலயம் உள்ளது.

இந்த தேவாலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த Inocencia என்ற சிறுமியின் சடலம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இந்த தேவாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர்.

தேவாலயத்தில் கூட்டம் நடைபெறும் வேளையில் நபர் ஒருவர் சிறுமியின் சடலத்தை வீடியோ படம் எடுத்துள்ளார்.

அப்போது, சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்து பார்த்ததும் அந்நபர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு மில்லியன் கணக்கில் மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

இது மூடநம்பிக்கை என சிலர் கருத்து தெரிவித்தாலும், சிறுமியின் சடலம் எதையோ உணர்த்த தனது கண்களை திறந்துள்ளது என சிலர் நம்புகின்றனர்.

300 ஆண்டுகளுக்கு முன்னர் மெக்ஸிகோவில் இச்சிறுமி வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது, ஏசுநாதர் மீது கொண்டுள்ள பக்தியால் கிறித்துவ கூட்டம் நடத்த தனது தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை மறுத்துள்ளார்.

எனினும், தந்தையின் எதிர்ப்பை மீறி சிறுமி கூட்டம் நடத்தியதால் ஆத்திரம் ஆன தந்தை சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

ஏசுநாதர் மீதுள்ள பக்தியை கண்டு மகிழ்ந்த Guadalajara தேவாலய குருக்கள் சிறுமியின் உடலை கொண்டு வந்து அழுகாமல் இருக்க மெழுகு வஸ்த்துக்களை பூசி இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

300 ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் சிறுமியின் சடலம்: திடீரென கண் விழித்ததால் பரபரப்பு.... Reviewed by Author on September 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.