அண்மைய செய்திகள்

recent
-

ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் எத்தனை? வெளியான புள்ளிவிபரம்....


ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட நிலையிலும் அதே நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் வசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று முன் தினம் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், ஜேர்மனியில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட பிறகும் 5,49,209 அகதிகள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலனவர்கள் 6 வருடங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

புகலிடம் மறுக்கப்பட்டவர்களில் துருக்கி நாட்டை சேர்ந்தவர்களே அதிகம் என தெரியவந்துள்ளது.

துருக்கியை சேர்ந்த 77,600 அகதிகள், கொசோவோ நாட்டை சேர்ந்த 68,549 அகதிகள் மற்றும் செர்பியாவை சேர்ந்த 50,817 அகதிகள் புகலிடம் மறுக்கப்பட்ட நிலையில் வசித்து வருகின்றனர்.

செர்பியா மற்றும் கொசோவோ நாடுகள் பாதுகாப்பானவை என ஜேர்மனி அறிவித்துள்ளதை தொடர்ந்து அந்நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் இழுப்பறி ஏற்பட்டு வருகிறது.

இதே பட்டியலில், 37,020 அகதிகள் தங்களுடைய தாய் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களை ஜேர்மனியில் தங்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் எத்தனை? வெளியான புள்ளிவிபரம்.... Reviewed by Author on September 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.