சீனாவில் அதிரடி: 45 எம்.பி.க்கள் பதவி பறிப்பு!
சீனா பாராளுமன்றத்தில் மாகாண உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்களில் 45 பேர் லஞ்சம் கொடுத்தும் மோசடி செய்தும் எம்.பி. பதவியை கைப்பற்றியது தெரியவந்ததையடுத்து அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சீனாவின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,சீனாவின் ரப்பர் ஸ்டாம்ப் எனப்படும் பாராளுமன்றத்தில் உள்ள 100 எம்.பி.க்கள், பல்வேறு மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுகிறன்றனர்.
இவர்களின் 45 பேர் லஞ்சம் கொடுத்தும், மோசடி செய்தும் எம்.பி. பதவியை பிடித்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது.
இதில் சீனாவின் லியோனிங் மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் அந்த 45 எம்.பி.க்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தியாவில் ராஜ்யசபா எம்.பி பதவியை பிடிக்க , ஓட்டுக்கு பணம் கொடுப்பது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளானவர்கள் குறுக்கு வழியில் ராஜ்யசபா எம்.பி. பதவியை பிடிப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகி்ன்றன.
சீனாவில் ஊழல், மோசடி செய்து எம்.பி. பதவி பெற்றவரகள் உடனடியாக பதவி பறிக்கப்பட்டது போன்று இந்தியாவில் நடக்குமா என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
சீனாவில் அதிரடி: 45 எம்.பி.க்கள் பதவி பறிப்பு!
Reviewed by Author
on
September 14, 2016
Rating:

No comments:
Post a Comment