அண்மைய செய்திகள்

recent
-

சார்ஜர் வெடித்ததில் 4 விரல்களை இழந்த மாணவன்: சீனாவில் துயர சம்பவம்.....


கைப்பேசியின் சார்ஜர் வெடித்து சிதறியதில் 12 வயது சிறுவனின் 4 விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சீனாவை சேர்ந்த Xiao Zhuo(12) என்ற சிறுவன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்துள்ளான். அப்போது காட்சிகள் தெளிவாக தெரியாத காரணத்தால் தொலைக்காட்சி வயரினை கழற்றி மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளான்.

அதன்படியே, தொலைக்காட்சி வயரினை கழற்றி கொண்டிருக்கையில், அருகில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைப்பேசியின் சார்ஜர் வெடித்து சிதறியுள்ளது.

இதில், அச்சிறுவனின் வயிறு, முகம் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது, இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், இவனது கைவிரல்கள் மோசமாக சேதமடைந்துள்ளது.

அறுவை சிகிச்சையில் இவனது நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன, சார்ஜர் வெடித்ததில் சிறுவனின் 4 விரல்கள் பறிபோய்விட்டதே என அச்சிறுவனின் குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சார்ஜர் வெடித்ததில் 4 விரல்களை இழந்த மாணவன்: சீனாவில் துயர சம்பவம்..... Reviewed by Author on September 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.