அமெரிக்காவில் குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் - டிரம்ப்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிற டொனால்டு டிரம்ப், அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடியேற்ற பிரச்சினைகள் குறித்த தனது கருத்தை உறுதிபட தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு கிடையாது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள்’’ என திட்டவட்டமாக கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘பொதுமன்னிப்பு என்பதை தகர்ப்போம். சட்டவிரோத குடியேற்றத்தை ஒழிப்போம். உலகத்துக்கு நாம் விடுக்கும் செய்தி இதுதான். சட்டவிரோதமாக குடியேறியுள்ள யாரும் இங்கே (குடியேறுவதற்கு) சட்டப்பூர்வ அந்தஸ்து பெற முடியாது. இந்த நாட்டின் குடிமகன் ஆகவும் முடியாது. இது ஒன்றுதான் சட்ட விரோதமாக எல்லை தாண்டி வருவதையும், சட்ட விரோதமாக உரிய காலம் கடந்து தங்கி இருப்பதையும் தடுத்து நிறுத்தும்’’ என குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் நாட்டின் நலனையும், பணியாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, சட்டப்பூர்வ குடியேற்ற சீர்திருத்தங்கள் செய்யப்படும், புதிய குடியேற்ற கமிஷன் அமைப்பதற்கான தருணம் வந்திருக்கிறது எனவும் கூறினார்.
மெக்சிகோ அதிபர் என்ரிக் பினோ நியெட்டோவை,
மெக்சிகோவில் சந்தித்து பேசி வந்துள்ள டிரம்ப், அமெரிக்கா– மெக்சிகோ என இரு நாடுகளின் எல்லைக்கு இடையே பெருஞ்சுவர் கட்டுவதற்கான தொகையை மெக்சிகோ தர வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் இதற்காக பணம் தர முடியாது என மெக்சிகோ அதிபர் என்ரிக் மறுத்து விட்டார். இதை அவரது செய்தி தொடர்பாளர் எட்வர்டோ சான்சேஸ் உறுதி செய்தார்.
அமெரிக்காவில் குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் - டிரம்ப்...
Reviewed by Author
on
September 02, 2016
Rating:

No comments:
Post a Comment