அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதால் பி.பி.சி செய்தியாளர் பணிநீக்கம்....


இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தியாளருக்கு ரூ.97 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பிரித்தானிய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த பி.பி.சி என்ற தனியார் செய்தி நிறுவனத்தில் சந்தனகீர்த்தி பண்டாரா(57) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு யூலை 22-ம் திகதி இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தம்பதிக்கு குட்டி இளவரசர் ஜோர்ஜ் பிறந்துள்ளார்.

இந்த செய்தியை மறுநாளான 23-ம் திகதி சிறப்பு செய்தியாக வெளியிட பி.பி.சி தீர்மானித்துள்ளது.

அப்போது, செய்தியை வெளியிடும் பொறுப்பை சந்தனகீர்த்தி பண்டாரா பார்த்து வந்துள்ளார். இளவரசி ஜோர்ஜ் பிறந்த செய்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சந்தனகீர்த்திக்கு தகவல் அளிக்கப்பட்டது.

ஆனால், செய்தி வெளியிட வேண்டிய அதே யூலை 23-ம் திகதி இலங்கையில் ’கருப்பு யூலை’ அனுசரிக்கப்பட்டது. அதாவது, கடந்த 1983ம் ஆண்டு யூலை 23-ம் திகதி தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

எனவே, இலங்கை தமிழர்களின் செய்திக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் என்றும், அதே நாளில் குட்டி இளவரசர் ஜோர்ஜ் பிறந்த செய்தி ‘சிறப்பு செய்தியில்’ வராது எனவும் சந்தனகீர்த்தி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

செய்தியாளார் கூறியது போலவே மறுநாள் இலங்கை தமிழர்களின் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதால் பி.பி.சி செய்தியாளர் பணிநீக்கம்.... Reviewed by Author on September 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.